தமிழ்நாடு அரசு | Government of Tamil Nadu
        |        |         Screen Reader Access |  A+  A   A-
banner
வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்


  • தமிழ்நாடு வேளாண் தொழிலாளர் நல வாரியம் 1988-ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டு, வாரியத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில், ‘தமிழ்நாடு வேளாண் தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலத் திட்டம்‘ 2001-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.
  • அதைத் தொடர்ந்து, விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் நலனுக்காக, தமிழ்நாடு வேளாண்மைத் தொழிலாளர்கள்-விவசாயிகள் (சமூகப் பாதுகாப்பு மற்றம் நலன்) சட்டம், 2006 (தமிழ்நாடு சட்டம் 29/2006) இயற்றப்பட்டது. அதன்படி, தமிழ்நாட்டின் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களை சார்ந்திருப்பவர்களின் கல்வி, சமூகப் பாதுகாப்பு மற்றும் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக மேற்படி திட்டம், 2011-ஆம் ஆண்டு உழவர் பாதுகாப்பு திட்டம் என மறுபெயரிடப்பட்டு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
  • முன்னதாக, முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழான முதியோர் ஓய்வூதியத் திட்டம் 01.04.2014 முதல் வருவாய் நிருவாக ஆணையர் மூலம் செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழான அனைத்து திட்டங்களையும் வருவாய் நிருவாக ஆணையர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) வாயிலாக செயல்படுத்த அரசாணை (நிலை) எண் 474, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 27.09.2022-இல் அனுமதிக்கப்பட்ட பணியாளர்களடன் வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையகரத்திற்கு மாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

    தகுதிகள் மற்றம் உறுப்பினர் பதிவு விவரம்

  • விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழிலில் ஈடுபட்டுள்ள அனைத்து விவசாயத் தொழிலாளர்கள்.
  • உள்ளூர் மீன்பிடி தொழில், பால்பண்ணை தொழில், தோட்டக்கலை, பட்டுப்புழு வளர்ப்பு, கால்நடை வளர்ப்பு, கோழிப்பண்ணை, மரங்கள் வளர்த்தல் போன்ற தொழில்களைச் செய்பவர்களும் விவசாயத் தொழிலாளர்களாக கருதப்படுவார்கள்.
  • 2.50 ஏக்கர் நன்செய் நிலம் அல்லது 5.00 ஏக்கர் புன்செய் நிலம் சொந்தமாக வைத்திருந்து அதில் நேரடியாக பயிர் செய்யும் சிறு/குறு விவசாயிகளும் மற்றும் பயிரிடும் குத்தகைதாரர்களும் தகுதியுடையவர்களாவர்.
  • இத்திட்டத்தின் கீழ், 18 வயது முதல் 65 வயது வரையிள்ளவர்கள் முதன்மை உறுப்பினர்களாக பதிவு செய்யப்படுகிறார்கள்.
  • முதன்மை உறுப்பினர்களைச் சார்ந்து வாழும் பொருள் ஈட்டாத இதர உறுப்பினர்கள் சார்ந்து வாழும் உறுப்பினர்களாக பதிவு செய்யப்படுவார்கள்.

  • இத்திட்டத்தின் கீழ், வழங்கப்படும் நலத்திட்டங்கள்

    வ.எண்.

    உறுப்பினர்களுக்கான திட்டங்கள்

    சார்பு உறுப்பினர்களுக்கான திட்டங்கள்

    1.திருமண உதவித்தொகை கல்வி உதவித் தொகை
    2.முதியோர் ஓய்வூதியம் திருமண உதவித் தொகை
    3.உறுப்பினர்களின் தற்காலிக உடல்திறனின்மைக்கான மாதாந்திர உதவி எச்.ஐ.வி-யினால் உயிரிழந்த உறுப்பினரின் ஆதரவற்ற குழந்தைகளுக்கான உதவித் தொகை
    4.விபத்து நிவாரணம்,
    ஈடச்சடங்கு செலவு,
    இயற்கை மரண உதவித்தொகை
    ஈமச்சடங்கு செலவு

    இத்திட்டத்தின் கீழ் பின்வரும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன

    வ.எண்.

    உறுப்பினர்களுக்கான திட்டங்கள்

    உதவித்தொகை விவரம்

    1.திருமண உதவித்தொகை ஆண்களுக்கு ரூ.8000/-, பெண்களுக்கு ரூ.10,000/-
    2.முதியோர் ஓய்வூதியம்மாதம் ரூ.1200/-
    3.உறுப்பினர்களின் தற்காலிக உடல்திறனற்ற காலத்திற்கான மாதாந்திர உதவித் தொகை
    i. காசநோய்
    ii. புற்றுநோய்
    iii. எச்.ஐ.வி/ எய்ட்ஸ்
    iv. சிறுநீரக செயலிழப்பு (Dialysis)
    v. கை, கால் முறிவு மற்றம் மூட்டு நழுவுதல்/விலகல்
    vi. நரம்பு சம்பந்தமான நோய்
    vii. முதுகு தண்டுவடம் பாதிப்பு
    viii.இதயநோய்
    ix. பார்வை இழப்பு
    x. கல்லீரல் நோய்
    xi. சிறுநீரக நோய்
    xii. மனநிலை பாதிப்பு
    xiii.சிக்கில் செல் ரத்த சோகை (Sickle Cell Aneamia)
    xiv. இரத்த அழிவு சோகை (Thalassemia)
    xv. இரத்த உறையா நோய் (Heamophilia)
    மாதம் ரூ.1000/-
    4.விபத்து நிவாரணம்மரணம் ரூ.1,00,000/-
    விபத்து காயங்களுக்கு ஏற்ப ரூ.20,000 முதல் ரூ.1,00,000/- வரை
    5.இயற்கை மரண உதவித் தொகைரூ.20,000/-
    6.ஈமச்சடங்கு செலவுரூ.2500/-

    சார்ந்து வாழும் உறுப்பினர் உதவித் தொகை விவரம்

    வ.எண்.

    உறுப்பினர்களுக்கான திட்டங்கள்

    உதவித்தொகை விவரம்

    1.கல்வி உதவித் தொகைதொழிற்பயிற்சி/ பல்தொழில் நுட்ப பயிற்சி முதல் முதுநிலை தொழிற் கல்வி வரை பயிலும் மாணவ மாணவியருக்கு ஆண்டொன்றுக்கு ரூ.1250/- முதல் ரூ.6750/- வரை வழங்கப்படுகிறது.
    2.திருமண உதவித்தொகைஆண்களுக்கு ரூ.8000/-, பெண்களுக்கு ரூ.10,000/-
    3.எச்.ஐ.வி-யினால் உயிரிழந்த முதன்மை உறுப்பினரின் ஆதரவற்ற குழந்தைகளுக்கான உதவித் தொகை மாதம் ரூ.1000/- வீதம் 18 வயது வரை வழங்கப்படுகிறது.
    4.ஈமச்சடங்கு செலவுரூ.2,500/-

    சிறப்பு அம்சங்கள்

  • அரசின் இதர திட்டங்களின் கீழ் சலுகைகள் பெற்றாலும், இத்திட்டத்தின் கீழும் கல்விக்கான உதவித் தொகை கூடுதலாக வழங்கப்படுகிறது.
  • பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட முதன்மை உறுப்பினர்களுக்கு நிவாரணமாக ரூ.50,000/- வழங்கப்படுகிறது.
  • காசநோய், புற்று நோய், எச்ஐவி / எய்ட்ஸ் மற்றும் கொடிய நோயினால் பாதிக்கப்பட்ட விவசாய உறுப்பினர்களுக்கு அவர்களின் தற்காலிக உடல்திறனின்மை காலத்திற்கு மாதாந்திர உதவித்தொகையாக ரூ.1000/-வழங்கப்படுகிறது.
  • முதன்மை உறுப்பினரின் இறப்புக்குக் பின்னரும் அவரைச் சார்ந்த விவசாய குடும்ப உறுப்பினர்களுக்கு கல்வி மற்றும் திருமண உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்படுகிறது.


  • முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தை நெறிப்படுத்துதல்

  • முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டத்தை நெறிப்படுத்தும் பொருட்டு, ஏற்கெனவே உள்ள பதிவேடுகளை மின்னணுமயமாக்கியும், நல திட்ட உதவிகள் கோரும் விண்ணப்பங்களை இணைய வலைதளத்தின் மூலம் பெறுவதற்கும், வருவாய் நிருவாக ஆணையரகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், கிராம நிருவாக அலுவலர்களால் பராமரிக்கப்பட்டு வரும் உறுப்பினர்களின் அனைத்து தகவல்களையும் கொண்ட பதிவேடுகளை, தமிழ்நாடு மின்ஆளுமை முகமையின் உதவியுடன் மின்னணுமயமாக்க கைப்பேசி செயலி ஒன்று உருவாக்கப்பட்டு வருகிறது.

Untitled Document