வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்
விபத்து நிவாரணத் திட்டம் மற்றும் நலிந்தோர் நிவாரணத் திட்டம்
விபத்து நிவாரணத் திட்டம்
இத்திட்டத்தின் கீழ், அறிவிக்கப்பட்ட 44 வகை தொழில்களில் ஈடுபட்டுவரும், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களில், 18-59 வயதுக்குட்பட்ட வருவாய் ஈட்டும் பிரதான நபர், விபத்தில் மரணம் அடைந்தால், இறந்த நபரின் குடும்பத்தின் வாரிசுதாரர்களுக்கு நிவாரணமாக ரூ.20,000/- வழங்கப்படுகிறது. காயத்தின் தன்மை மற்றும் உடல் குறைபாட்டின் அளவைப் பொறுத்து, குடும்பத்தின் வருவாய் ஈட்டும் பிரதான நபருக்கு ரூ.7,500/- முதல் ரூ.15,000/- வரை வழங்கப்படுகிறது. இத்திட்டம் 100 % ஒன்றிய அரசின் நிதியின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நலிந்தோர் நிவாரணத் திட்டம்
இத்திட்டத்தின் கீழ், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் குடும்பங்களில் 18 முதல் 59 வயது வரை உள்ள வருவாய் ஈட்டும் பிரதான நபர் (ஆண் அல்லது பெண்) இயற்கை மரணம் அடைந்தால், இறந்த நபரின் குடும்பத்திற்கு நிவாரணத் தொகையாக ரூ.20,000/- வழங்கப்படுகிறது. இத்திட்டம் 100% ஒன்றிய அரசின் நிதியின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.