
விடுதலைப் போராட்ட வீரர்களுக்கும் முன்னாள் இந்திய தேசிய ராணுவத்தில் பணியாற்றியவர்களுக்கும் ஓய்வூதியம் மற்றும் ஏனைய பயன்கள்
(அ) இந்திய தேசிய இராணுவத்தில் (Ex.INA) பணியாற்றிய முன்னாள் வீரர்கள்.
(ஆ) 1946-ஆம் ஆண்டில் நடைபெற்ற கடற்படை கலகத்தில் பங்கு கொண்டவர்கள்.
(இ) மதுரை சதித்திட்ட வழக்கில் சிறைத் தண்டனை அடைந்தவர்கள்.
(ஈ) விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டதற்காக அரசு பணியிலிருந்து பணியறவு / பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள்.
(உ) விடுதலைப் போராட்டத்தின் போது தலைமறைவாக இருந்தவர்கள் மற்றும் சொத்து பறிமுதல் / பற்றுகை செய்யப்பட்டவர்கள்.
வ.எண். |
கால அளவு |
ஓய்வூதியத் தொகை |
குடும்ப ஓய்வூதியத் தொகை |
|---|---|---|---|
| 1. | 01.10.1966 முதல் | 50/- | 50/- |
| 2. | 15.08.1972 முதல் | 75/- | 75/- |
| 3. | 01.04.1979 முதல் | 100/- | 100/- |
| 4. | 25.01.1981 முதல் | 150/- | 150/- |
| 5. | 10.06.1986 முதல் | 250/- | 250/- |
| 6. | 01.08.1989 முதல் | 350/- | 350/- |
| 7. | 01.01.1991 முதல் | 400/- | 400/- |
| 8. | 01.08.1992 முதல் | 1,000/- | 500/- |
| 9. | 01.09.1995 முதல் | 1,500/- | 750/- |
| 10. | 15.08.1997 முதல் | 3,000/- | 1,500/- |
| 11. | 01.05.2007 முதல் | 4,000/- | 2,000/- |
| 12. | 01.09.2009 முதல் | 5,000/- | 2,500/- |
| 13. | 15.08.2012 முதல் | 7,000/- | 3,500/- |
| 14. | 01.08.2013 முதல் | 9,000/- | 4,500/- |
| 15. | 15.08.2014 முதல் | 10,000/- | 5,000/- |
| 16. | 15.08.2015 முதல் | 11,000/- | 5,500/- |
| 17. | 15.08.2016 முதல் | 12,000/- | 6,000/- |
| 18. | 15.08.2017 முதல் | 13,000/- | 6,500/- |
| 19. | 15.08.2018 முதல் | 15,000/- | 7,500/- |
| 20. | 15.08.2019 முதல் | 16,000/- | 8,000/- |
| 21. | 15.08.2020 முதல் | 17,000/- | 8,500/- |
| 22. | 15.08.2021 முதல் | 18,000/- | 9,000/- |
| 23. | 15.08.2022 முதல் | 20,000/- | 10,000/- |
| 24. | 15.08.2023 முதல் | 20,000/- | 11,000/- |
| 25. | 15.08.2024 முதல் | 21,000/- | 11,500/- |
i. சிவகங்கையைச் சேர்ந்த மருதுபாண்டியர் சகோதரர்களின் 92 வழித்தோன்றல்கள் மேற்படி ஓய்வூதியத்தைனைப் பெற்று வருகின்றனர்.
ii. வீரபாண்டிய கட்டபொம்மனின் வரித்தோன்றல் ஒருவர் மேற்படி ஓய்வூதியத்தினைப் பெற்று வருகிறார்.
iii. முன்னாள் இராமநாதபுர மன்னர் முத்துராமலிங்க விஜயரகுநாத சேதுபதியின் 49 தகுதியான வழித்தோன்றல்கள் மேற்படி ஓய்வூதியத்தைனைப் பெற்று வருகின்றனர்.
iv. சுதந்திரப் போராட்ட வீரர் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் வழித்தோன்றல் ஒருவர் மேற்படி ஓய்வூதியத்தைனைப் பெற்று வருகிறார்.
i. இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் பெறும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு 01.07.2024 முதல் ரூ.39,260/- (அடிப்படை ஓய்வூதியம் ரூ.26,000/- மற்றம் அகவிலைப்படி 51%) ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது.
ii. ஒன்றிய அரசின் / மாநில அரசின் ஓய்வூதியம் பெறும் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு / ஒன்றிய அரசின் குடும்ப ஓய்வூதியம் பெறும் நபர்களுக்கு, மாநில அரசின் நிதியிலிருந்து ஓய்வூதியமாக, மாதமொன்றிற்கு ரூ.500/-ம், மருத்துவப்படியாக ரூ.500/-ம் வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு ஒன்றிய அரசு ஓய்வூதியம் பெறும் விடுதலைப் போராட்ட வீரர்கள் / ஒன்றிய அரசின் குடும்ப ஓய்வூதியம் பெற்று வரும் நபர்களின் எண்ணிக்கை 382 ஆகும்.