தமிழ்நாடு அரசு | Government of Tamil Nadu
        |        |         Screen Reader Access |  A+  A   A-
banner
வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்

மாவட்ட நிருவாகம்


    மாவட்ட நிருவாகம்
    நமது மாநிலம் 38 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் இயங்கி வருகிறது. மாவட்ட ஆட்சியர்/மாவட்ட நிருவாக நடுவரின் வழிகாட்டுதல் மற்றம் மேற்பார்வையின் கீழ், மாவட்ட வருவாய் அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறைகளின் மாவட்ட அளவிலான அலுவலர்கள் தங்கள் துறை சார்ந்து பணிகளை மேற்கொள்கின்றனர்.

    (1) வருவாய் கோட்ட நிருவாகம்
    மாவட்டங்கள் ஒவ்வொன்றும் பல கோட்டங்களாக பிரிக்கப்பட்டு சார் ஆட்சியர் / வருவாய் கோட்டாட்சியர்களால் நிருவகிக்கப்படுகிறது. இவர்கள் தங்கள் அதிகார எல்லைக்குள் வருவாய் நிருவாகம், சட்ட ஒழுங்கு பராமரிப்பு, நில நிருவாகம், பேரிடர் காலங்களில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாநிலத்தில் தற்போது 94 கோட்டங்கள் உள்ளன.

    (2) வருவாய் வட்ட நிருவாகம்
    வட்டாட்சியரின் தலைமையில் வட்ட நிருவாகம் இயங்கி வருகிறது. வட்டாட்சியர், பட்டா, சிட்டா, அடங்கல், நில வருவாய் வசூல் மற்றும் பல்வேறு சான்றிதழ்களான சாதி, வருமானம், இருப்பிடம் மற்றும் வாரிசு சான்றிதழ்களை வழங்குதல் உள்ளிட்ட பணிகளை துணை வட்டாட்சியர்கள், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிருவாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் ஆகியோர் துணையுடன் மேற்கொண்டு வருகின்றார். தற்போது 317 வருவாய் வட்டங்கள் மாநிலத்தில் செயல்பட்டு வருகின்றன.

    (3) வருவாய் குறுவட்ட நிருவாகம்
    ஒவ்வொரு வருவாய் வட்டமும், சில கிராமங்கள் அடங்கிய வருவாய் குறு வட்டங்களாக பிரிக்கப்பட்டு வருவாய் ஆய்வாளர் தலைமையில் நிருவகிக்கப்படுகிறது. வருவாய் ஆய்வாளர்கள், நில வருவாய் வசூல், புல சரிபார்ப்பு மற்றும் கிராம நிருவாக அலுவலர்களின் பணிகளை மேற்பார்வையிடுதல் போன்றவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். தற்போது 1,197 வருவாய் குறு வட்டங்கள் மாநிலத்தில் செயல்பட்டு வருகிறது.

    (4) வருவாய் கிராம நிருவாகம்
    வருவாய் கிராம நிருவாகம் தொடர்ந்து மாவட்ட நிருவாகத்தின் முக்கிய அங்கமாக இருந்து வருகிறது. வருவாய் கிராம நிருவாகம், கிராம நிருவாக அலுவலரால் நிருவகிக்கப்படுகிறது. கிராம கணக்குகள் பராமரிப்பு, பிறப்பு இறப்பு பதிவு செய்தல், சான்றிதழ்கள் வழங்குதல், நில வரி வசூல், அரசு நிலங்களை பாதுகாத்தல் மற்றும் முக்கிய உள்ளூர் நுண்ணறிவு ஆதாரமாகவும் கிராம நிருவாக அலுவலர் விளங்குகிறார். கிராம நிருவாக அலுவலர் தினசரி நிலைமையை கண்காணித்து, கிராமத்தில் சட்ட ஒழுங்கு பிரச்சினை குறித்த அச்சுறுத்தல் மற்றும் பிற முக்கியமான பிரச்சினைகள் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்தல் மற்றும் அறிக்கை அளிப்பதில் முக்கிய பங்க வகிக்கிறார். தற்போது மாநிலத்தில் 16,744 வருவாய் கிராமங்கள் உள்ளன.

Untitled Document