வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்
மின்னணு சான்றிதழ்கள்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையால் அனைத்து மாவட்டங்களிலும், தமிழ்நாடு மின்ஆளுமை முகமையுடன் (TNeGA) இணைந்து இணையவழி மூலமாக பொதுமக்களிடமிருந்து பெறப்படும் விண்ணப்பங்களுக்கு சேவைகளை விரைவாக வழங்கும் பொருட்டு, e-சேவை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
பின்வரும் மின்னணு சான்றிதழ்கள் / சேவைகள் இணையவழியில் வழங்கப்படுகின்றன:-
1. சாதி சான்றிதழ்,
2. வருமான சான்றிதழ்,
3. இருப்பிடச் சான்றிதழ்,
4. முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ்,
5. கணவனால் கைவிடப்பட்டோர் சான்றிதழ்,
6. விவசாய வருமான சான்றிதழ்,
7. கலப்புத் திருமணச் சான்றிதழ்,
8. விதவை சான்றிதழ்,
9. வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ்,
10. குடிபெயர்வு சான்றிதழ்,
11. சிறு / குறு விவசாயி சான்றிதழ்,
12. இயற்கை இடர்பாடுகளினால் சான்றிதழ்களை இழந்தமையை உறதி செய்யும் சான்றிதழ்,
13. திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ்,
14. ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ்,
15. வாரிசு சான்றிதழ்.
16. வசிப்பிடச் சான்றிதழ்.
17. சொத்து மதிப்பு சான்றிதழ்.
18. அடகு வணிகர் உரிமம்.
19. கடன் கொடுப்போர் உரிமம்.
20. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் சான்றிதழ்.
21. பொருளாதாரத்தில் பின்தங்கியவர் என்பதற்கான சான்றிதழ். (வருமானம் மற்றும் சொத்துகள்)
22. ஆதரவற்ற விதவை சான்றிதழ்.
23. ஜெயின் மத சிறுபான்மையினர் சான்றிதழ்.
24. பொது கட்டடங்கள் உரிமம்.
25. தற்காலிக பட்டாசு உரிமம்.
26. பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் (பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் அல்லது தாழ்த்தப்பட்டோர் வகுப்பிலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மாறியவர்).
27. வேலை வாய்ப்பிற்கான முதல் தலைமுறை முதல் பட்டதாரி சான்றிதழ்.
கடந்த நான்கு ஆண்டுகளில், 3,44,10,497 சான்றிதழ்கள் விண்ணப்பதாரர்களுக்கு இணையதளம் வாயிலாக வழங்கப்பட்டுள்ளன.
தேசிய தகவலியல் மையம் (NIC) மூலம் கீழ்க்கண்ட சேவைகள் இணையவழியில் வழங்குவதற்கு மென்பொருள் உருவாக்கப்பட்டு வருகிறது :-
1. திரையரங்குகளின் சி-படிவ உரிமத்தை புதுப்பித்தல்
2. நிரந்தர பட்டாசு உரிமம்
1884-ஆம் ஆண்டு வெடிபொருள் சட்டத்தின் கீழ் பட்டாசு வைத்திருத்தல் மற்றும் விற்பனைக்கான தற்காலிக உரிமம் வழங்குவதற்கான விண்ணப்பங்களை இணையவழியில் சமர்ப்பிக்கும் புதிய முறையை அரசாணை (நிலை ) எண் 309, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை [வ.நி.3(1)] துறை, நாள் 27.08.2018-இல் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட வருவாய் அலுவலர்களால் தற்காலிக பட்டாசு உரிமம் இணையவழியில் தீபாவளி பண்டிகை 2020 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
இதனைத் தொடர்ந்து, சென்னை, ஆவடி மற்றும் தாம்பரம் ஆகிய மாநகராட்சி அதிகார எல்லைகளில் உள்ள காவல் துறைக்கு, தற்காலிக பட்டாசு உரிமம் வழங்குவதற்கான இணையவழி மூலம் விண்ணப்பிக்கும் முறை நீட்டிக்கப்பட்டு, சென்னை,ஆவடி மற்றும் தாம்பரம் காவல் ஆணையரக ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, மேற்கண்ட காவல் துறை அதிகார எல்லைகளில் உள்ள பகுதிகளுக்கு 19.10.2024 முதல் இணைய வழியில் தற்காலிக பட்டாசு உரிமம் வழங்கும் முறை நடைமுறைக்கு வந்துள்ளது.