தமிழ்நாடு அரசு | Government of Tamil Nadu
        |        |         Screen Reader Access |  A+  A   A-
banner
வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்

திட்டங்கள்

சமூகப் பாதுகாப்புத் திட்டம்

  • சமூகப் பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் தமிழ்நாடு தேசிய அளவில் முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.
  • சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினரான மூத்த குடிமக்கள், மாற்றுத் திறனாளிகள், விதவைகள், விவசாயத் தொழிலாளர்கள், ஏழை விவசாயிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் 50 வயதைக் கடந்த திருமணமாகாத ஆதரவற்ற பெண்கள் ஆகியோருக்கு இத்திட்டத்தின் கீழ் ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
  • தற்போது அனைத்து சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ்மாதாந்திர ஓய்வூதியத் தொகையாக ரூ.1000/- வழங்கப்பட்டு வருகிறது.
  • இத்திட்டம் பெரும்பான்மையான மக்களுக்கு குறிப்பாக முதியோர்களுக்கும், மாற்றுத் திறனுடையவர்களுக்கும் சென்றடைய ஏதுவாக இத்திட்டத்திற்கான விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளது .
  • 2020-21 ஆம் ஆண்டிற்கான ஓய்வூதியத் திட்டங்களுக்கு மக்களின் தேவையைக் கருதி ரூ. 4,307.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 28-06-2021 அன்று உள்ள பதிவுகளின் படி 33.94 இலட்சம் பயனாளிகள் கீழ்காணும் திட்டங்களின் மூலம் பயன் பெற்று வருகின்றனர்.

ஓய்வூதிய திட்டங்களின் பெயர் மற்றும் தொடங்கப்பட்ட தேதி


திட்டத்தின் தொடக்கத்திலிருந்து வழங்கப்பட்ட ஓய்வூதிய தொகை

வ.எண். .

திட்டத்தின் பெயர்

வயது

மத்திய அரசின் பங்களிப்பு

ரூ

மாநில அரசின் பங்களிப்பு

ரூ

1

இந்திராகாந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம்

60 வயது முதல் 79 வயது வரை

200/-

800/-

80 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவயது

500/-

500/-

2

இந்திராகாந்தி தேசிய மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம்

18 வயதுமுதல் 79 வயதுவரை

300/-

700/-

3

இந்திராகாந்தி தேசிய விதவையர் ஓய்வூதியத் திட்டம்

40 வயது முதல் 79 வயது வரை

300/-

700/-

4

மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம்

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது

 

1000/-

5

ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம்

18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது

 

1000/-

6

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது

 

1000/-

7

ஆதரவற்ற / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியத் திட்டம்

30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது

 

1000/-

8

50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம்

50 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது

 

1000/-

9.

இலங்கை அகதிகளுக்கான ஓய்வூதியத் திட்டம்

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயது

 

1000/-

Untitled Document