தமிழ்நாடு அரசு | Government of Tamil Nadu
        |        |         Screen Reader Access |  A+  A   A-
banner
வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்

வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்


  • மாநிலத்தின், அடிப்படை வருவாய் நிருவாகத்தில் இத்துறை மிக முக்கிய மற்றும் இன்றிமையாதப் பங்கினை வகிக்கிறது.
  • வருவாய் நிருவாக ஆணையர் / மாநில நிவாரண ஆணையரின் தலைமையில் சமூக பாதுகாப்புத்திட்ட ஆணையர், இணை ஆணையர் (வருவாய் நிருவாகம்) பேரிடர் மேலாண்மை இயக்குநர் மற்றும் இதர அலுவலர்கள் இயங்குகின்றனர்.
Structure

இத்துறையின் பணிகளில் அடங்குபவை:-

  • முக்கிய பணிகள்
  • 1.பொது வருவாய் நிருவாகம்
  • 2.நில வருவாய் வசூல்
  • 3.பொது மக்கள் குறை தீர்க்கும் பணிகள்
  • 4.சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களை செயல்படுத்துதல்
  • 5.நலிந்தோர் துயர் துடைப்புத் திட்டங்கள்
  • 6.இணையத்தின் வாயிலாக பொதுமக்களுக்கு 25 வகையான சான்றிதழ்கள் மற்றும் உரிமங்கள் வழங்கப்படுதல்
  • 7.பேரிடர் மேலாண்மை மற்றும் பேரிடர் தணிப்பு

  • செயல்படுத்தப்படும் சட்டங்கள்
  • 1.வருவாய் வசூல் சட்டம் 1864
  • 2.புதைப்பொருள் சட்டம் 1878
  • 3.தமிழ்நாடு வெடிபொருள் சட்டம் 1884
  • 4.தமிழ்நாடு அடகு பிடிப்போர் சட்டம் 1943
  • 5.பொதுக் கட்டிட உரிமம் சட்டம் 1965
  • 6.தமிழ்நாடு பிறப்பு /இறப்பு பதிவுச்சட்டம் 1969
  • 7.தமிழ்நாடு அதிக வட்டிக்கு கடன் கொடுப்பதை தடுத்தல் சட்டம் 2003
  • 8.பேரிடர் மேலாண்மை சட்டம் 2005


ஆட்சி எல்லைகளை மறுசீரமைத்தல் / புதிய நிருவாக அலகுகளை உருவாக்குதல்.
அரசின் சேவையினை எளிதாகவும் விரைவாகவும் மக்களின் இருப்பிடத்தில் இருந்தே பெறும் பொருட்டு பொதுமக்களின் கோரிக்கையின் அடிப்படையில், தொலைதூர பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களுக்கு அரசின் சேவைகளை விரைந்து அளிக்கும் பொருட்டு, புதிய மாவட்டங்கள், புதிய வருவாய் கோட்டங்கள் மற்றும் புதிய வருவாய் வட்டங்கள் அரசின் வழிகாட்டி நெறிமுறைகளின்படி உருவாக்கப்பட்டுள்ளன. மக்கள் தொகையின் அடிப்படையில் புதிய வருவாய் வட்டங்களை பிரிப்பது தொடர்பாக அரசுக்கு பரிந்துரைங்க வருவாய் நிருவாக ஆணையர், நில நிருவாக ஆணையர், நிலச் சிர்திருத்த ஆணையர் ஆகிய 3 அலுவலர்களை கொண்ட குழு அரசால் அமைத்து ஆணையிடப்பட்டது.
மாவட்ட வாரியாக உள்ள வருவாய் கோட்டங்கள், வருவாய் வட்டங்கள், குறு வட்டங்கள் மற்றும் கிராமங்களின் எண்ணிக்கை விவரங்கள்

வ.எண் மாவட்டம் வருவாய் கோட்டங்களின்
எண்ணிக்கை
வருவாய் வட்டங்களின்
எண்ணிக்கை
குறுவட்டங்களின்
எண்ணிக்கை
கிராமங்களின்
எண்ணிக்கை

1

அரியலூர்

2 4 15 195

2

செங்கல்பட்டு

3 8 40 676

3

சென்னை

3 16 51 138

4

கோயம்புத்தூர்

3 11 38 298

5

கடலூர்

3 10 32 905

6

தருமபுரி

2 7 23 479

7

திண்டுக்கல்

3 10 40 361

8

ஈரோடு

2 10 35 465

9

கள்ளக்குறிச்சி

2 6 24 562

10

காஞ்சிபுரம்

2 5 25 525

11

கன்னியாகுமரி

2 6 22 188

12

கரூர்

2 7 20 203

13

கிருஷ்ணகிரி

2 8 31 661

14

மதுரை

4 11 51 665

15

மயிலாடுதுறை

2 4 15 287

16

நாகப்பட்டினம்

2 4 16 236

17

நாமக்கல்

2 8 32 454

18

நீலகிரி

3 6 15 106

19

பெரம்பலூர்

1 4 11 152

20

புதுக்கோட்டை

3 12 45 763

21

இராமநாதபுரம்

2 9 38 400

22

ராணிப்பேட்டை

2 6 18 331

23

சேலம்

4 14 44 640

24

சிவகங்கை

2 9 39 521

25

தென்காசி

2 8 30 246

26

தஞ்சாவூர்

3 9 50 911

27

தேனி

2 5 17 114

28

தூத்துக்குடி

3 10 41 480

29

திருச்சிராப்பள்ளி

4 11 43 507

30

திருநெல்வேலி

2 8 30 370

31

திருப்பத்தூர்

2 4 15 197

32

திருப்பூர்

3 9 33 351

33

திருவள்ளூர்

3 9 49 787

34

திருவண்ணாமலை

3 12 54 1067

35

திருவாரூர்

2 8 28 573

36

வேலூர்

2 6 20 317

37

விழுப்புரம்

2 9 34 928

38

விருதுநகர்

3 10 39 603

மொத்தம்

94 313 1195 17662

வருவாய்த்துறை கட்டடங்கள்
பொதுமக்கள் எளிதில் தொடர்பு கொள்ளும் வகையிலும் அலுவலக சூழலை மேம்படுத்தும் பொருட்டும், மாவட்ட ஆட்சியர் நிலை முதல் கிராம நிருவாக அலுவலர் நிலை வரை உள்ள அனைத்து வருவாய்த்துறை அலுவலர்களுக்கு தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகளை வழங்கும் விதமாக அலுவலக மற்றும் குடியிருப்புக் கட்டடங்கள் கட்ட அரசு முன்னுரிமை அளித்து வருகிறது.

Untitled Document