தமிழ்நாடு அரசு | Government of Tamil Nadu
        |        |         Screen Reader Access |  A+  A   A-
banner
வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்

தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம்

  • மத்திய அரசின் பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 இயற்றப்படுவதற்கு முன்பே, தமிழ்நாடு அரசால், அரசாணை எண். 323 வருவாய் NCI (2)] துறை, நாள்: 08.07.2003-ன் மூலமாக, பேரிடர் நிகழ்வின் போது தணிப்பு மற்றும் ஆயத்த நிலை ஏற்பாடு போன்ற பணிகளை ஒருங்கிணைந்த வகையில் செயல்படுத்த தலைமைச் செயலாளர் அவர்களை தலைவராக கொண்டு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையர் அமைக்கப்பட்டது.
  • மாநில, மாவட்ட மற்றும் ஊரக அளவில் பேரிடர் மேலாண்மை பணிகளை திறம்பட மேற்கொள்ள வரையறுக்கப்பட்ட அமைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு வழிமுறைகள் குறித்து பேரிடர் மேலாண்மை சட்டம், 2005 (மத்திய அரசு சட்டம் 53), வழங்குகிறது. இந்த சட்டத்தின் பிரிவு 14(2)-ன் படி மாநில அளவில், தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம், மாண்புமிகு முதலமைச்சர் தலைமையின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் உறுப்பினர்களின் விவரம் பின்வருமாறு:-
    • மாண்புமிகு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்
    • அரசு தலைமைச் செயலாளர்
    • வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை செயலாளர்
    • நிதித் துறை செயலாளர்
    • உள் துறை செயலாளர்
    • உயர் கல்வித் துறை செயலாளர்
    • பள்ளி கல்வித் துறை செயலாளர்
    • மாநில நிவாரண ஆணையர் மற்றும் வருவாய் நிர்வாக ஆணையர்
    • இயக்குநர் மேலாண்மை மற்றும் தணிப்பு மையம், அண்ணா பல்கலைக்கழகம், சென்னை.
    • தலைவர் கட்டட பொறியியல் துறை, இந்திய தொழில்நுட்ப கழகம், சென்னை

  • இவ்வாணையமானது பல்வகை பேரிடர் மேலாண்மை தொடர்பான கொள்கை உருவாக்கத்திற்கு வழிகாட்டுதல், மாநில பேரிடர் மேலாண்மை திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தல் மற்றும் பேரிடர் அபாய குறைப்பு நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து முக்கிய செயல்பாடுகளை கண்காணித்தல் போன்ற பணிகளை மேற்கொண்டு வருகின்றது. https://tnsdma.tn.gov.in

Untitled Document