தமிழ்நாடு அரசு | Government of Tamil Nadu
        |        |         Screen Reader Access |  A+  A   A-
banner
வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்

பொங்கல் பண்டிகைக்காக வழங்கப்படும் விலையில்லா வேட்டிகள் சேலைகள் வழங்கும் திட்டம்

  • தமிழக அரசு, கைத்தறி செநவாளர்களுக்கு ஆண்டு முழுவதும் தொடர்ந்து வேலைவாய்ப்பு வழங்குவதற்காகவும், கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் வாழும் ஏழை எளிய மக்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகைக்காக விலையில்லா வேட்டி, சேலை வழங்கும் திட்டம் என இரண்டு பயன்களுக்கான திட்டத்தினை 1983-ஆம் ஆண்டு அப்போதைய முதலமைச்சர் பாரதரத்னா டாக்டர் எம்.ஜி.ராமச்சந்திரன் அவர்களால் தொடங்கப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2004-ஆம் ஆண்டு முதல் அரிசி அட்டைப் பெற்றுள்ள அனைவருக்கும் இலவச வேட்டி, சேலை வழங்க விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
  • கடந்த 2012-ஆம் ஆண்டு முதல், இத்திட்டத்தின் பெயரான இலவச வேட்டி / சேலை வழங்கும் திட்டம் என்பதை மாற்றி, “விலையில்லா வேட்டி / சேலை வழங்கும் திட்டம்” என பெயரிடப்பட்டு தொடர்ந்து இத்திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

தகுதி
விலையில்லா வேட்டி / சேலை அனைத்து அரிசி அட்டைதாரர்கள், கிராம கைவினைஞர்கள், மீனவர்கள், நிலமற்ற ஏழை விவசாயிகள், விவசாயம் சார்ந்த கூலி வேலை செய்பவர்கள், கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மக்கள் அனைவருக்கும் இச்சேவை வழங்கப்பட்டு வருகிறது

Untitled Document