தமிழ்நாடு அரசு | Government of Tamil Nadu
        |        |         Screen Reader Access |  A+  A   A-
banner
வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்

திட்டங்களின் தகுதிகள்தமிழ்நாடு அரசின் முழு நிதி ஆதாரத்துடன் செயல்படுத்தப்படும் சமூக பாதுகாப்பு ஓய்வூதியத் திட்டங்களின் கீழ் பயன்பெற கீழ்கண்ட தகுதிகளைப் பெற்றிருக்க வேண்டும்.

வ.எண்

திட்டத்தின் பெயர்

மாற்றம் செய்யப்பட்ட நிபந்தனைகள்

1

மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியத் திட்டம்

தகுதி-வேலையற்றவராக இருத்தல் வேண்டும்.
தனியார் மற்றும் சுயவேலையில் இருப்பின் ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும்.
வயது-18 மற்றும் அதற்கு மேல் ஊனம் நிலை-40 சதவிகிதம் மற்றும் அதற்கு மேல்.
18 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் தலைமiயிலான குழு அனுமதி மூலம் தகுதியானவர்களுக்கு வழங்குகப்படும்.

2

ஆதரவற்ற விதவையர் ஓய்வூதியத் திட்டம் தகுதி

ஆதரவற்ற விதவையாக இருத்தல் வேண்டும்.
வயது-18 மற்றும் அதற்கு மேல் அசையா சொத்தின் மதிப்பு ரூ.1,00,000/- த்திற்குள் இருத்தல் வேண்டும்.
ஆனால், வழங்கப்பட்டுள்ள இலவச வீடுகளின் மதிப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

3

முதலமைச்சரின் உழவர் பாதுகாப்புத் திட்டம்

தகுதி-ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.
வயது-60 மற்றும் அதற்கு மேல் நிலமற்ற விவசாயத் தொழிலாளியாக இருத்தல் வேண்டும்.
அசையா சொத்தின் மதிப்பு ரூ.1,00,000/-த்திற்குள் இருத்தல் வேண்டும்.
ஆனால், வழங்கப்பட்டுள்ள இலவச வீடுகளின் மதிப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

4

ஆதரவற்ற / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஓய்வூதியத் திட்டம்

தகுதி-ஆதரவற்றவராக இருத்தல் வேண்டும்.
வயது-30 மற்றும் அதற்கு மேல் சட்ட பூர்வமாக விவாகரத்து அல்லது குறைந்தது 5 ஆண்டுகள் கணவனால் கைவிடப்பட்டவரக இருத்தல் வேண்டும்.
அல்லது நீதிமன்றத்திலிருந்து சட்டப்பூர்வமாக பிரிவு சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
சொத்தின் மதிப்பு ரூ.1,00,000/-த்திற்குள் இருத்தல் வேண்டும் ஆனால், வழங்கப்பட்டுள்ள இலவச வீடுகளின் மதிப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

5

50 வயதிற்கு மேற்பட்ட திருமணமாகாத ஏழைப் பெண்களுக்கான ஓய்வூதியத் திட்டம்

தகுதி- ஆதரவற்ற திருமணமாகாத பெண்ணாக இருத்தல் வேண்டும்.
வயது-50 மற்றும் அதற்கு மேல் சொத்தின் மதிப்பு ரூ.1,00,000/-த்திற்குள் இருத்தல் வேண்டும். ஆனால், வழங்கப்பட்டுள்ள இலவச வீடுகளின் மதிப்பு கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.

Untitled Document