தமிழ்நாடு அரசு | Government of Tamil Nadu
        |        |         Screen Reader Access |  A+  A   A-
banner
வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்

மின்னணு சான்றிதழ்கள்


மின்னணு சான்றிதழ்கள் வழங்கும் திட்டம்
வருவாய்த் துறையினை நாடி வரும் பொதுமக்களுக்கு விரைவான சேவையினை அளித்திடும் வகையில், தகவல் தொழில் நுட்பத்துறை மற்றும் தேசிய தகவல் மையத்தின் தொழில் நுட்ப உதவியோடு அனைத்து மாவட்டங்களிலும் மின் ஆளுமைத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாநிலம் முழுவதும் 12,733 பொது சேவை மையங்கள் e-Distrct (Common Service Centres) வாயிலாக கீழ்காணும் 25 வகையான சான்றுகள் மின்னணு முறையில் வழங்கப்பட்டு வருகின்றன.

1 சாதிச்சான்றுகள்
2 வருமானச் சான்றுகள்
3 இருப்பிடச் சான்றுகள்
4 முதல் தலைமுறை பட்டதாரி சான்றுகள்
5 கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சான்றுகள்
6 விவசாய வருமான சான்றிதழ்
7 சிறு, குறு விவசாயி சான்றிதழ்
8 கலப்புத் திருமணச் சான்றிதழ்
9 விதவைச் சான்றிதழ்
10 வேலையில்லாதவர் என்பதற்கான சான்றிதழ்
11 குடிபெயர்வு சான்றிதழ்
12 இயற்கை இடர்பாடுகளினால் மாணவர்கள் பள்ளி (ம) கல்லூரி சான்றிதழ்களை இழந்தமையை உறுதி செய்யும் சான்று
13 ஆண் குழந்தை இல்லை என்பதற்கான சான்றிதழ்
14 திருமணம் ஆகாதவர் என்பதற்கான சான்றிதழ்
15 வாரிசு சான்றிதழ்
16 வசிப்பிடச் சான்றிதழ்
17 சொத்து மதிப்பு சான்றிதழ்
18 அடகு வணிகர் உரிமம் சான்றிதழ்
19 கடன் கொடுப்போர் உரிமம்
20 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் வகுப்புச் சான்றிதழ்
21 பொருளாதார ரீதியில் பின்தங்கியவர் என்பதற்கான சான்றிதழ் (வருமானம் மற்றும் சொத்துக்கள்)
22 ஜெயின் மதத்திற்கான சிறுபான்மையினருக்கான சான்றிதழ்
23 ஆதரவற்ற விதவை சான்றிதழ்
24 பொது கட்டடங்கள் உரிமம்
25 தற்காலிக பட்டாசு உரிமம்
இணைய வழி விண்ணப்பங்கள்

Untitled Document