நிருவாகம்
தமிழ்நாடு அரசு, பொது மக்களின் குறைகளைத் தீர்ப்பதில் பல்வேறு நடைமுறைகளை செயல்படுத்தி வருகின்றது. பொதுமக்களின் குறைதீர்வு நடைமுறையை செம்மைப்படுத்த ஏதுவாக பல்வேறு கண்காணிப்பு மற்றும் தொடர் நடவடிக்கைகள் மூலமாகவும், பொது மக்களிடமிருந்து பெறப்படும் கருத்துக்களின் அடிப்படையிலும் தமிழ்நாடு அரசு குறைதீர்வு நடைமுறைகளை முன்னுரிமை அளித்து செயல்படுத்தி வருகின்றது. மேலும், குறைதீர்வு மனுக்கள் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் பன்முனை யுக்திகளையும், அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்படுத்துவதால், அரசின் சேவைகள் மிக எளிதாக விரைவில் மக்களைச் சென்றடைய வழிவகை செய்யப்படுகிறது. https://gdp.tn.gov.in
மக்கள் குறைதீர்க்கும் நாள்
ஒவ்வொரு திங்கட்கிழமையும் அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்கள் / வருவாய்க் கோட்ட அலுவலர்கள் மற்றும் வட்டாட்சியர்கள், தங்களின் தலைமை இடங்களில் இருந்து பொது மக்களிடம் மனுக்களைப் பெற்று, அவர்களின் குறைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இத்திட்டத்தின் கீழ், மனுக்கள் பெறப்பட்ட நாள், தீர்வு செய்யப்பட்ட விவரம் மற்றும் நிலுவையில் உள்ள மனுக்கள் விவரம். இதற்கென உருவாக்கப்பட்ட ஒரு மென்பொருள் மூலம் பதிவு செய்யப்படுகின்றன. இதன் மூலம், மனுக்களின் தற்போதைய நிலைமையை இணையதளம் மூலம் பொதுமக்கள் அறிந்து கொள்ளலாம்.