தமிழ்நாடு அரசு | Government of Tamil Nadu
        |        |         Screen Reader Access |  A+  A   A-
banner
வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரகம்

மக்கள் தொகை கணக்கெடுப்பு (National Population Register)

  • இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு 1872-ல் துவங்கப்பட்டு, 1881 ஆம் ஆண்டு முதல் 10 ஆண்டுக்கு ஒருமுறை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 15வது மக்கள் தொகை கணக்கெடுப்பு 2011-ல் நடைபெற்றது.
  • 2021-ல் நடைபெற இருப்பது இந்தியாவின் 16வது மக்கள் தொகை கணக்கெடுப்பும் சுதந்திர இந்தியாவின் 8-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும். 2021 -ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்காக அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகள் மத்திய அரசு பல்வேறு அமைச்சகங்களுடன் கலந்தாலோசித்து இப்பணி துவங்குவதற்கான ஆயத்த பணிகளை முடித்துள்ளது.
  • தமிழ்நாட்டில் இக்கணக்கெடுப்புப் பணி தொடர்பாக தக்க ஆலோசனைகள் வழங்குவதற்கு வருவாய் நிருவாக ஆணையரை தொழில்நுட்பம் சார்ந்த அறிவுரை வழங்கும் குழுவில் (Technical Advisory Committee) உறுப்பினராக சேர்த்து அரசாணை எண் 62, பொது (சட்ட அலுவலர்கள்) துறை, நாள் 18.1.2019-ல் ஆணைகள் வெளியிட்டுள்ளது.

Untitled Document